Popular Posts
-
http://www.youtube.com/watch?v=-H0_vlUheyc&feature=player_embedded அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் , விண்ண...
-
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடைக்கானல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இயற்க்கையின் வண்ணக் கோலம் கொடைக்கானல். 2133 மீட்டர் உயரத்தில் உ...
-
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி [ Tues, Aug 24, 2010, 04:55 pm ] பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர் சென்னையிலிருந்து 7...
-
அழியாத எழிலோவியம் - அஜந்தா இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந் தா எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரைந்தஓவியங்...
-
Himalaya Beauty Himalaya Beauty The Himalaya is a mountain range in Asia, separating the Indian subcontinent from the Tibetan Plate...
-
Aamby Valley City [India] A amby Valley City is the first of its kind Megalopolis, spread over more than ten thousand undulating acres of v...
-
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம் 25 Sep 2010 தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்...
-
Indonesia The Republic of Indonesia, the world's fourth most populous nation, has 203 million people living on nearly one thousand per...
Saturday, July 17, 2010
திருவேங்கடம்
கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்,
நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
னுள்ளன வொக்கின்றதே.
இந்தியா வில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதிருப்பதி (தெலுங்கு: తిరుపతి) ஒரு மிகப்பெரிய திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆகவே இந்த திருத்தலமும் என்றும் நிரம்பி வழிந்த படியே காட்சியளிக்கும்.
தமிழில் திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் லக்ஷ்மியின் (திரு) கணவன் (பதி) என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் எடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேஷாசலம் என்று பெயர் உள்ளது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிஷபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய எழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
வரலாறு
உலகிலேயே பழமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்ததிருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட தமிழ்ச்சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.
இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவிலை தொண்டை மான் என்ற பல்லவ மன்னனால் ஆக்கம் பெற்றதாக கூறப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.விசய நகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தை சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பரதாயத்தில்ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்த கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது.
சாலை வழி
தென்னிந்தியா முழுவதும் செல்ல மற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினர் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகளை விடுகின்றனர்.
தொடருந்து வழி
திருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிக்கும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சென்னை மும்பை ரயில் வழியின் மத்தியில் இருக்கும் ரேணிகுண்டா சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன. திருப்பதியில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.
வான் வழி
திருப்பதி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகும். இங்கிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன. நகரத்தின் மையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். மிக அருகாமையில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் சென்னையில் உள்ளது. இது திருப்பதியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று திருப்பதி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன
ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா
ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திரா பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள் செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 10 இலிருந்து 15 வரை புலிகள் உள்ளன.
திருவிழாக்கள்
திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவ பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேஷமாக கொண்டாடப் படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா எல்லாம் வல்ல கோவிந்த கடவுளின் தமக்கை ஆவார்.
திருவேங்கடம் ( திருப்பதி)
இப்ப தெரிகிறதா பாருங்க
தீபத்திருவிழா
கோபுரம்
நான் வீடு கட்டிவிட்டேன் அப்போ நீங்க ?
அப்பார்ட்மெண்ட் காம்பிளக்ஸ்
மற்றொரு அழகிய காட்சி
கருடன் சிலை உங்கள வரவேற்கிறது.
Note: Most of the pictures were taken from internet sources with thanks.
ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை
தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு பெருமை வாய்ந்த ஸ்தலம் திருப்பதி. தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களில் வணங்கப்படும் திருமலை கோயில், தமிழக வைணவ பக்தி வரலாற்றில் திருவரங்கத்துக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.இதன் வருட வருமானம் மூச்சை பிடித்து கொள்ளுங்கள்...சுமார் 800 கோடி.தினசரி உண்டியல் வசூல் மட்டும் 1 கோடி.ஒரே கட்டில் ஐம்பது லட்சம்,1 கோடி என காணிக்கை செலுத்தும் பக்தர்களும் உண்டு.
திருப்பதியில் வரும் இத்தகைய அளப்பரிய வருமானம் அரசுக்கு சென்று சேர்கிறது.மீதமுள்ள வருமானத்தில் மக்களுக்கு பல நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது திருப்பதி தேவ்ஸ்தானம்.
திருமலை தேவ்ஸ்தானத்தில் சுமார் 14,000 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அதுபோக திருப்பதி நகரின் பொருளாதாரமே திருமலை கோயிலை நம்பித்தான் இருக்கிறது என்றால் மிகையல்ல.திருமலை தேவ்ஸ்தானத்தின் தலைவர் கருனாகர ரெட்டி விளிம்பு நிலை மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை திருக்கோயில் மூலம் செயல்படுத்தி வருகிறார்."தலித கோவிந்தம்" என்ற திட்டத்தின் கீழ் உற்சவர் சிலையை தலித் மக்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று பெருமாள் - தாயார் சிலைகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. ஜாதி கொடுமை தலைவிரித்தாடும் கிராமங்களில் அக்கொடுமை குறைய இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ரெட்டி.
பெருமாள் தாயாருக்கு மட்டும் திருமணம் நடந்தால் போதுமா?வருடா வருடம் ஏழைகளுக்கு 2 பவுன் செலவில் தங்கம் அணிவித்து, திருமண உடைகளையும் தந்து திருகோவில் சார்பில் திருமணம் நடைபெறுகிறது.இதுவரை சுமார் 15,000 ஏழை தம்பதியினர் இதனால் பயனடைந்துள்ளனர்
ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்துக்கு 20 கோடி செலவில் திருமலை திருகோயில் சார்பில் பள்ளிகள் துவக்கப்பட்டு இலவச கல்வி அளிக்கப்படுகிறது.இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவையும் இப்பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
திருப்பதி தேவ்ஸ்தானம் சார்பில் தொழுநோயாளிகள் மருத்துவமனை நடத்தப்படுகிறது.நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை போக உணவு மற்றும் உறைவிடம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை காலம் முழுக்க வழங்கப்படுகிறது.(6 முதல் 18 மாதங்கள்).
பாலா மந்திர் என்ற பெயரில் அனாதை ஆசிரமம் நடந்து வருகிறது.சுமார் 500 குழந்தைகள் இதில் ஒரே சமயத்தில் சேர முடியும்.இவர்களுக்கு உணவு,உறைவிடம் மற்றும் கல்வி போக டெய்லரிங், போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
வேங்கடேஸ்வரா மெடிகல் சயின்ஸ் ஆஸ்பத்திரி மூலம் ராயலசீமா மாவட்டத்தின் ஏழைகளுக்கு மிக குறைந்த செலவில் வைத்தியம் செய்யப்படுகிறது.
காது கேட்காத 350 குழந்தைகளுக்கு இலவச பள்ளியும் நடத்தப்படுகிறது.10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் சிறப்பான கவனிப்பு இந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.இந்த பள்ளி மாணவ்ர்கள் நார்மலாக இருக்கும் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்லும் அளவுக்கு தயார் படுத்தப்படுகிறார்கள்.படிப்பு முடிந்தபின் மாணவர்கள் பலர் திருப்பதி கோயிலிலேயே வேலை வாய்ப்பும் பெறுகிறார்கள்.விரைவில் இந்த பள்ளியை கல்லூரியாக மாற்றும் திட்டமும் உள்ளதாம்.
அதுபோக இயற்கை வளங்களை காப்பதில் திருப்பதி பெருமாள் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்கிறார்.ஆம்..80 கி.மிக்கு குழி வெட்டி சுமார் 3884 சிறு.குறு அணைகட்டுகளை கட்டி சேஷாதிரி மலையில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.இதன்மூலம் வருடத்துக்கு 1 டி.எம்.சி மழை நீர் மக்களுக்கு சேமிக்கப்படுகிறது.இதுபோக சுமார் 65 லட்சம் மரங்கள் தேவஸ்தானத்தால் நடப்பட்டு அதுபோக சுமார் 40 டன் அளவுக்கு விதைகளும் நடப்பட்டுள்ளன.
திருப்பதி நகருக்கும் கோயிலுக்கும் ஏராளமான மின்சாரம் தேவைப்படுமே?அதை காற்று மூலம் உற்பத்தி செய்தால் தேசத்துக்கு எத்தனை நல்லது?45 கோடி செலவில் நிறுவப்பட்ட காற்ராலைகள் மூலம் சுமார் 45 மெகாவாட் மின்சாரத்தை வருடத்துக்கு உற்பத்தி செய்கிரது திருமலை.இதன்மூலம் வருடம் சுமார் 5.73 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
தினமும் அதிக அளவில் அன்னதானம் நடைபெறும் திருப்பதியில்(25,000 பேர்), சுமார் 15,000 பேருக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.மொட்டை அடித்த பிறகு பக்தர்கள் சுடுநீரில் குளிக்க வேண்டுமே?அதற்கும் சூரியனே கைகொடுக்கிறார்.ஆம்..தினமும் 1.63 லட்சம் லிட்டர் சுடுநீர் சூரிய வெப்பத்தில் காய்ச்சப்பட்டு சுமார் 22.5 லட்சம் யூனிடுகள் மின்சாரம் சேமிக்கப்படுகிறது
மக்களுக்கு ஒரு திருக்கோயில் எப்படி உதவ முடியும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும் திருமலையை மனதார வாழ்த்தி வணங்குவோம். திருமலை பாலாஜி போல் நாமும் தேசத்துக்கு சேவை செய்வோம்.
நன்றி:
Divya Desam
Tiruvengadam, Vengadam, Tirumalai, Vadamalai, Venkatadri, Venkatachalam, Vrishabhadri, Garudadri, Seshadri, Anjanadri, Narayanadri, Nrismhadri, and a host of other synonmys; but today most popularly simply as Tirupati — the Sacred Place.
Perumal
mūlavar
Srinivasa, Venkatesa, Venkateswara, Venkatanatha, Venkatachalapati, Tiruvengadattaan, Tiruvengadam Udaiyaan; Thimmappa (Kannada); also known today as Balaji.
utsavar
Malayappa. All of the mūlavar’s names also apply to the utsavar.
Thâyâr
(at Tiruchanoor, near the base of the hill) Padmaavati, Alarmel Mangai. She is also present on the chest of the Lord in the form of a gold pendant.
ஸ்ரீநிவாசன்
நாள்தோறும் அதிகாலை திருமஞ்சனத்தின் போது எம்பெருமானின் திவ்ய தரிசனம். பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பெரும்பேறு.
Just for Good Luck To All….
Morning bath of Bhagwan Tirupati Balaji, not everyone is blessed with this gift and if you do,
Morning bath of Bhagwan Tirupati Balaji, not everyone is blessed with this gift and if you do,
kindly share it.
பிரம்மோத்சவத்தின் போது எம்பெருமாட்டியும் எம்பிரானும்
முழு அலங்காரத்துடன்.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்! * தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன. * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர். * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது. * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர். * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும். * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும். * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். * பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன. * சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. * ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது. * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. * மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம். * அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார். * வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. * மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது. * திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம். * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார். * ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. * திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர். * ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. * 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன. [இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. மேலும் சில புகைப்படங்கள். Lord Sri Venkateswara Gopuram with Gold Finishing Museum In Tirumala Silpa Thoranam LORD During Bramhostavam Chandragiri Fort Sri Kalahasti temple Tirumala Balaji Temple Arial view Crowd During Bramhostavam Akasa Ganga Tirupati Town View |
குலசேகர ஆழ்வார்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே
( 685, பெருமாள் திருமொழி 4-7-8 )
தீர்க்கமுடியாது தெடர்ந்துவரும் பாவங்களை தீர்க்கும் திருமாலே, அடியவரும், தேவாதி தேவர்களும் நாடிவரக்கூடிய நின் கோயிலின் வாசலில் ஒரு படிக்கல்லாக கிடந்து உன் பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகர ஆழ்வார் அழகாக பாடியுள்ளார். இதனால் திருவேங்கடமுடையான் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்று பெயர்.
வேங்கடாத்ரி, சேஷாத்ரி, சேஷாச்சலம் வேதாசலம், கருடாசலம், ஸ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்று ஏழு மலைகளுக்கு மத்தியில் இருப்பதால் 'ஏழு மலைவாசா' என்று அழைக்கப்படுகிறது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 1
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே!*நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*
போமிடத்து உன்திறத்து எத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே! 2
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது*
நில்லுமின் என்னும் உபாயமில்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே!*
சொல்லலாம் போதே உன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்* அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே
பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஜா ஆகியோர்
தங்களுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்தினை சனிக்கிழமை (06/11/2010) தானமாக வழங்கினர்.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தேவஸ்தான செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ், கிரிஜாவின் கணவர் கே.பி.பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கே.பி.பாண்டே கூறியது:-
நடிகை காஞ்சனா, அவரது சகோதரி கிரிஜா ஆகியோருக்குச் சொந்தமான 9,360 சதுர அடி நிலம், கட்டடங்கள் சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளன.
இதன் மதிப்பு சுமார் ரூ. 20 கோடி இருக்கலாம்.
இச்சொத்தின் மீது பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த மார்ச் மாதம்தான் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து போயின.
கடவுள் அருளாளால்தான் இவை அனைத்தும் சுமூகமாக நடைபெற்றதாகக் நாங்கள் நம்புகிறோம். எனவே தற்போது இச்சொத்தினை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்குகிறோம்.
தேவஸ்தானம் இந்த இடத்தில் ஆன்மிகம், மதம், கலாசாரம் சார்ந்த
நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வணிக நோக்கத்திற்காக இந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம்.
எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மேலும் 4,500 சதுர அடி நிலத்தையும்
எதிர்காலத்தில் கோயிலுக்கு தானம் வழங்க எண்ணியுள்ளோம் என்றார் பாண்டே.
மதுரையில் தகவல் மையம் - செயல் அலுவலர்:- நிகழச்சியில் திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியது:-
சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மதிப்பு வாய்ந்த இச்சொத்தினை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி வழங்கி உள்ளனர்.
ரூ. 20 கோடி மதிப்புள்ள இந்த இடம் தானம் அளித்தவர்கள் கோரியபடி ஆன்மிகம் மற்றும் கலாசாரம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே இந்த இடம்
பயன்படுத்தப்படும். சென்னையில் உள்ளது போல் திருமலை தேவஸ்தான தகவல் மையம் மற்றும் அலுவலகம் மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் கோயில் மற்றும் தகவல் மையம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தை அருகே கோயில் அமைக்கும் திட்டம் குறித்து இரு மாநில அரசுகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
செவ்வாய், புதன்கிழமைகளில் தரிசனம்:-
செவ்வாய் காலை முதல் புதன்கிழமை நள்ளிரவுவரை திருமலையில் சாமியை தரிசிக்க அனுமதிக்கும் தூரம் சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
இது கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை சென்னை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளூர் அளவில் கல்யாண இரதயாத்திரைகளை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளோம்.
இதே போல் தமிழகத்திலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார் கிருஷ்ணா ராவ்.
நன்றி:- தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment