Popular Posts

Friday, October 29, 2010

Hyderabad

Hyderabad [India]
Hyderabad is the capital of the Indian state of Andhra Pradesh. It also goes by its sobriquet City of Pearls. As of 2010 it is the seventh largest city and seventh largest metropolitan area of India. Hyderabad was founded by Muhammad Quli Qutb Shah in 1591 on the banks of Musi.

Hyderabad has developed into one of the major hubs for the information technology industry in India. In addition to the IT industry, various biotechnology and pharmaceutics companies have set up their operations in Hyderabad owing to its established Public sector in Life Science Research and Genome Valley. It has developed a unique culture, reflected in its language and architecture.

Hyderabad’s population of the metropolitan area was estimated above 6.3 million. Hyderabad is a cosmopolitan city, whose residents are adherents to a wide range of religions. Telugu and Urdu are the principal languages spoken in the city, while English, Hindi and Marathi are also widely spoken.




பெயர் வரலாறு

ஹைதராபாத்தின் பெயர்வரலாற்றுக்கு பின் இருக்கும் கோட்பாடுகள் பல்வேறு விளக்கங்கள் கொண்டதாகும். முகம்மது குலி குதுப் ஷாஇந்த நகரத்தை நிறுவிய பிறகு பாக்மதி அல்லது பாக்யவதி என்ற பஞ்சார இனப்பெண்ணை காதலித்து மணந்து அந்நகரத்திற்கு பாக்யநகரம்என்ற பெயரைச் சூட்டினார் என்ற கருத்து அவற்றில் புகழ்பெற்றதாக நிலவுகிறது. பாக்யவதி இஸ்லாம் மதத்திற்கு மாறிய பொழுது, அவள் தன் பெயரை ஹைதர் மஹால் என்று மாற்றிக்கொண்டாள். இந்த காரணத்தால் இந்நகருக்கு இரண்டு உருது வார்த்தைகளாகிய ஹைதர்-ஆ'பாத் ஆகியவற்றைக் கொண்டு ஹைதராபாத் என்ற பெயரைச் சூட்டினர், இதற்கு ’ஹைதர் நீடூழி வாழ்க’ என்பது பொருளாகும். ஆனால் இந்நகரத்தின் பெயர் குறித்து மிகுதியாக மக்கள் நம்புவது இஸ்லாமிய ஞானி முகம்மதின் மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின்மற்றொரு பெயர் ஹைதர் என்பதால் இப்பெயர் சூட்டினார்கள் என்பதாகும்.

வரலாறு

500 க்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்நகரம் நிறுவப்பெற்றது என்றாலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கி.மு.500 ஆம் ஆண்டில் இருந்த இரும்பு காலம் சார்ந்த இடங்களை இவ்விடத்தில் அகழாய்வு செய்து வெளிக்கொணர்ந்துள்ளனர். ஏறத்தாழ 1000+ ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை காகத்தியர்கள் அரசாண்டனர். குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த முஹம்மது குலி குதுப் ஷாகொல்கொண்டாவை ஆண்டு வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அதற்கு முன்பாக பாமினி சுல்தான் வம்சத்தின் கீழ் அடிமையாக இருந்த இந்நகரத்திற்கு 1512 ஆம் ஆண்டில் சுதந்திரம் வழங்கினார்கள், இந்த வம்சத்தினரின் பழைய தலைநகரமான கொல்கொண்டாவில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையிலிருந்து விடுபடுவதற்காக, 1591 ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரமானது முசி நதிக்கரையோரம் நிறுவப்பெற்றது. இவரே சார்மினார் கட்டிடம் கட்டுவதற்கும் ஆணையிட்டார்.

முஹம்மது குலி குதுப் ஷாவின் கல்லறை, ஹைதராபாத், இந்தியா.
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஹைதராபாத்தை 1687 ஆம் ஆண்டு கைப்பற்றினார். இந்த குறுகியகால முகலாய ஆட்சியில், இந்நகரத்தில் முகலாயர்கள் நியமித்த ஆளுநர்கள் மிகவிரைவில் தன்னாட்சியைப் பெற்றனர். 1724 ஆம் ஆண்டில் நிஜாம் உல் முல்க் (நாட்டின் ஆளுநர்) என்ற புனைப்பெயருடைய முகலாயப் பேரரசர் முதலாம் ஆசப் ஜா, தனது பகைவரைத் தோற்கடித்து ஹைதராபாத்தைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.ஆசப் ஜா வம்சத்தின் ஆதிக்கம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு ஓராண்டு வரையில் நீடித்தது. அதன்பிறகு ஆட்சிக்குவந்த ஆசப் ஜா வின் சந்ததியினர் ஹைதராபாத்தின் நிஜாம்களாக பொறுப்பேற்றனர். ஏழு நிஜாம்களின் ஆட்சிக்குப் பின் ஹைதராபாத் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மிகுந்த வளர்ச்சி அடைந்தது. பேரரசின் தலைநகரான கொல்கொண்டாவை கைவிட்டு முறைப்படி ஹைதராபாத்தை தலைநகராக மாற்றியமைத்தார்கள். நிஜாம் சாகர்துங்கபத்ரா,ஒஸ்மான் சாகர்ஹிமாயத் சாகர் மற்றும் இது போன்ற பல பெரிய நீர்த்தேக்கிடங்களை பணிந்தார்கள். இச்சமயத்தில் நாகர்ஜுனா சாகர்கட்டுவதற்கான ஆயத்தபணிகளில் ஈடுபட்டாலும்; உண்மையில் இப்பணியை இந்திய அரசாங்கம் ஏற்றேடுத்து 1969 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள். இங்குள்ள நிஜாம்களின் செல்வவளத்தையும் ஆடம்பரத்தையும் விவரிக்கும் நிஜாம்களின் ஆபரணங்கள் குறித்த கட்டுக்கதைகள் சுற்றுலா பயணிகளைக் ஈர்கின்றது.இந்திய அரசாட்சிக்குட்பட்ட மாநிலங்களில் மிகவும் செழிப்பானதாகவும் பெரியதாகவும் இம்மாநிலமே அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் நிலப்பகுதி 90,543 மீ² ஆகவும் 1901 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 50,073,759 ஆகவும் இருந்தது. இதன் தோராய வருமானம் £90,029,000ஆகும்.

நிஜாம்கள் வாழ்ந்த சௌமஹல்லா அரண்மனை ஆசப் ஜாஹி வம்சத்தின் மையமாக இருந்தது.
1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹைதராபாத் பிரித்தானிய முடியாட்சியின் ஒரு அங்கமாக இருந்ததேயன்றி ஆங்கிலேய இந்தியாவின் அங்கமாக இல்லை. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேய இந்தியா சுதந்திரம் பெற்று அதனை இந்தியாவாகவும் பாக்கித்தானாகவும் பிரிக்கும் சமயத்தில், ஆங்கிலேய முடியாட்சி அரசாட்சிக்குரிய மாநிலங்களின் மீது இருந்த தனது உரிமையை கைவிட்டு தனது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை அவற்றிடமே கொடுத்தது. நிஜாம்கள் இஸ்லாமிய மரபைச் சார்ந்து இருந்ததால் தாங்கள் தனித்து ஆளவேண்டும் அல்லது பாகிஸ்தானிடம் சேரவேண்டும் என விரும்பினர். இருப்பினும், இது இந்திய ஒன்றியத்தின் தொலை நோக்கு பார்வையில் ஏற்கமுடியாததாக அமைந்தது. நிஜாம்களின் முயற்சிகள் நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய நில உடைமை சார்ந்த கிளர்ச்சிக்கு வித்திட்டது. நிஜாம்களை பின்வாங்க வைப்பதற்காக இந்திய ஒன்றியம் ஹைதராபாத்துக்கு பொருளாதார தடைகளை விதித்து இடையூறு விளைவித்தது. இதைத் தடுக்கும் வண்ணம் ஒரு அசையா நிலை ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட முன்வந்தனர். ஆனால் நிஜாம்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய அரசு ஹைதராபாத் அரசாட்சிக்குட்பட்ட மாநிலத்தின் மீது தனது இராணுவத்தை செலுத்தி முற்றுகையிட்டது. ஆபரேஷன் போலோ என்ற இந்த நடவடிக்கை 17 செப்டம்பர் 1948 அன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ஒன்றியத்தோடு இணைவதற்கான ஆவணத்தில் நிஜாமும் கையெழுத்திட்டார்.
1955 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் நவீன வளர்ச்சியை பார்த்து வியந்த அம்பேத்கர் இந்தியாவின் இரண்டாம் தலைநகரமாக ஹைதராபாத்தை ஆக்க வேண்டும் என்று முன் மொழிந்தார். அவர், "தில்லியில் இருக்கும் எல்லா வசதிகளும் ஹைதராபாதில் உள்ளது. இது தில்லியைக் காட்டிலும் மேலான நகரம். தில்லியில் இருக்கும் பிரம்மாண்டம் அனைத்தும் இங்கு உள்ளது. இங்கு இருக்கும் கட்டிடங்கள் விலை மலிவாகவும் இவை தில்லியில் இருப்பவற்றை விட மிக அழகாகவும் இருக்கின்றன. இங்கு பாரளுமன்ற இல்லம் மட்டும் தான் இல்லை. ஆனால் அதையும் இந்திய அரசு எளிதாக கட்டலாம்." என்று கூறினார்.
1 நவம்பர் 1956 அன்று அரசு இந்திய மாநிலங்களை மொழியின் அடிப்படையில் சீரமைத்தது. ஹைதராபாத் மாநிலத்தின் ஆட்சிப்பகுதிகள் இந்த காலக்கட்டத்தில் புதிதாக உருவாகிய ஆந்திரப் பிரதேசத்திற்கும் , மும்பை மாநிலத்திற்கும் (பின்னர் மகாராட்டிரம்), கர்நாடக மாநிலங்கள் ஆகியவற்றிற்கும்) சென்றது. ஹைதராபாத் மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் இருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. இவ்வாறு ஹைதராபாத் புதிய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக மாறியது.
'90 ஆம் ஆண்டுகளில் நடந்த தாராளமயமாக்குதல் மூலம் இந்நகரம் தகவல் தொழில் நுட்பத் தொழிற்சாலைக்கான முக்கிய மையமாக வளர்ச்சியடைந்தது. அதன் காரணமாக இந்நகரம் நாகரிகத்திலும் வாழ்க்கைமுறையிலும் மிகுந்த மாற்றங்களை அடைந்தது. தகவல் தொழில் நுட்பத் தொழிற்துறையின் வளர்ச்சியும் புதியதாக கட்டிய சர்வதேச விமான நிலையம் ஆகியவை 2000 ஆம் ஆண்டுகளில் நிலவிற்பனைத் துறை உள்ளிட்ட பல தொழில் துறைகள் வளர்ச்சிக்கு சான்றாக விளங்கியது, இருப்பினும் 2008–2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சர்வதேச நிதிநெருக்கடி இதனுடைய வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது
புவியியல்

ஹுசைன் சாகர் ஏரி
தக்காண பீடபூமியில் அமைந்துள்ள ஹைதராபாத் ஏறத்தாழ கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 489 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது (1,607 அடி உயரம்).பெரும்பாலான பகுதிகள் பாறைகளாக இருந்தாலும் சில பகுதிகள் குன்றுகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இப்பகுதியின் பொதுவான விளைபயிராக நெல் உள்ளது.
உண்மையில் ஹைதராபாத் நகரம் முதலில் முசி நதிக்கரையில் நிறுவப்பெற்றது. தற்பொழுது அறியப்படும் வரலாற்றுப் பழமைவாய்ந்த நகரம் நதியின் தெற்குக் கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இவ்விடத்திலேயே சார்மிநாரும் மெக்கா மசூதியும் அமைந்துள்ளன. பல அரசு கட்டடங்களும் முக்கிய இடங்களும் நதியின் வடக்குப்பகுதியில் குறிப்பாக ஹுசைன் சாகர் ஏரியின் தெற்குப்பகுதியில் அமைந்ததால், இப்பகுதியே நாளடைவில் நகரத்தின் மையப்பகுதியாக மாற்றமடைந்தது. செகந்திராபாத்துடன் இணைந்து, விரைவாக வளர்ச்சியடைந்த இந்நகரம், 12 நகராட்சி வட்டங்களுடைய மண்டலமாக அமைந்து பெரிய நிலப்பரப்பும், மிகுதியான மக்கள்தொகையும் கொண்ட ஒருங்கிணைந்த நகரமாக விளங்குகிறது. வருங்காலத்திலும் இதன் அருகிலுள்ள மேலும் பல சிறிய கிராமங்கள் இந்த இரட்டை நகரங்களுடன் இணையக்கூடும் என்று 
எதிர்பார்புள்ளது.
தட்ப வெப்பநிலை
தட்பவெப்பநிலை வரைபடம்
Hyderabad
பெமாமேஜூஜூ்செடி
3.2
29
15
5.2
32
17
12.0
35
20
21.0
38
24
37.3
39
26
96.1
34
24
163.9
31
23
171.1
30
22
181.5
30
22
90.9
30
20
16.2
29
16
6.1
28
14
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Weather Information Service
ஹைதராபாத் வெப்பமான சாவன்னா தட்ப வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. பிப்ரவரியின் பிற்பகுதி முதல் ஜூன் முற்பகுதி வரை கோடைக்காலமாகவும், ஜூன் இறுதியிலிருந்து அக்டோபர் மாதம் முற்பகுதி வரை மழைக்காலமாகவும், அக்டோபர் இறுதியில் இருந்து பிப்ரவரி முற்பகுதி வரை மிதமான குளிர்காலமாகவும் இங்கு தட்பவெப்பநிலை காணப்படுகிறது. இந்த நகரம் நல்ல உயரத்தில் இருப்பதால் இங்கு காலை வேளைகளும் மாலை வேளைகளும் பொதுவாக குளிர்ச்சியாக உள்ளது. ஹைதராபாத் ஆண்டு தோறும் சுமார் 32 அங்குல (அதாவது 810 மி.மி) மழையைப் பெறுகின்றது, இம்மழையானது பெரும்பாலும் பருவமழைக் காலங்களிலேயே பொழிகின்றது. இதுவரை பதிவாகியதில் அதிகபட்ச வெப்ப நிலையாக 2 ஜூன், 1966 அன்று பதிவாகிய 45.5 o C (113.9 °F) வெப்பநிலை அமைந்துள்ளது, அது போலவே குறைந்தபட்ச வெப்பநிலையாக 8 ஜனவரி 1946 ஆம் ஆண்டில் பதிவான 6.1o C (43 °F) வெப்பநிலை அமைந்துள்ளது.

மக்கள் வாழ்க்கைக் கணக்கியல்


2001 ஆம் ஆண்டில் இந்நகரின் மக்கள் தொகை 3.6 மில்லியனாக இருந்து 2009 ஆம் ஆண்டில் 4.0 மில்லியனைத் தாண்டியது, தர்போது 6.2 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் அதிக மக்கள் இருக்கும் நகரங்களில் ஒன்றாக இந்நகரம் திகழ்கிறது. தொடர்ந்து இந்த நகரின் பெருநகர்ப் பகுதியின் மக்கள் தொகை 6.3 மில்லியனைத் தொடும் வாய்ப்புள்ளது.[23] மக்கள் தொகையில் 40% இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதன் பொருட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய சமூகமாக ஹைதராபாத் இஸ்லாம் சமூகம் உள்ளது.[24]இந்நகரத்தின் தலைமை இடத்திலும், பழைய நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இந்நகர மக்கள்தொகையில் கிறித்தவர்கள் குறைந்த அளவே காணப்படுகின்றனர். கிறித்தவ தேவாலயங்கள் நகரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன, அவற்றில் புகழ்பெற்றவை ஆபித் மற்றும் செகந்தரபாத் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்நகரில் தெலுங்கு மொழியும் உருது மொழியும் முதன்மை மொழிகளாக வழங்குகிறது. கல்வி கற்றவர்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
துருக்கிபெர்சியன்தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் தாக்கத்துடன் இங்கே வழங்கும் உருது மொழி தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது, இதுஹைதராபாத்தி உருதுஅல்லது தக்காணி என்று அழைக்கப்படுகிறது. ஆட்சி மொழியான தெலுங்கு மாநிலத்தின் சில இடங்களில் வேறுபடுகிறது, இருப்பினும் இது மாநிலம் முழுவதிலும் அடிப்படையில் ஒரே மாதிரியாக வழங்குகிறது.





















































No comments:

Post a Comment